நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அரசு அலுவலகங்களில் திடீர் என சோதனை செய்ததில் கணக்கில் காட்டப்படாத 33 கோடிக்கு அதிகமான ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று திடீரென சோதனை செய்தது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு அரசு துறையை சார்ந்த 60 அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த திடீர் சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 33 கோடியை 75 லட்சத்து 773 ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த முறைகளில் தொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை என தெரிவித்துள்ளனர். தமிழக அரசு அலுவலகங்களில் நடத்திய இந்த அதிரடி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.