துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

Mahendran
புதன், 26 ஜூன் 2024 (12:50 IST)
தமிழக அரசு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை அவ்வப்போது மாற்றம் செய்து வரும் நிலையில் தற்போது சில துறைகளின் இயக்குனர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
அந்த வகையில் மருத்துவம் மற்றும் கிராமப்புற சேவைகள் இயக்குனராக டாக்டர் ராஜமூர்த்தி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே தமிழக அரசு மருத்துவத் துறைகளில் பல்வேறு பொறுப்புகளை ராஜமூர்த்தி வகித்து வந்தார் என்பதும் தற்போது அவர் மருத்துவமனை மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் பதவியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் இவர் பல பணிகளை ஆற்றி உள்ளார் என்றும் பல முக்கிய முடிவுகள் எடுத்து உள்ளார் என்றும் அதனை கணக்கில் கொண்டு தான் அவருக்கு இந்த முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்