அமைச்சரவை மாற்றமும் இல்லை, துணை முதல்வர் பதவியும் இல்லை: முதல்வரின் அதிரடி முடிவு..!

Mahendran

செவ்வாய், 18 ஜூன் 2024 (10:15 IST)
பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த உடன் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் ஒரு சில அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து ஆலோசனை செய்து இப்போதைக்கு எந்த மாற்றமும் வேண்டாம் என்று கூறிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. ஜூலை மாதம் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அந்த பணிகளில் தான் அவர் தற்போது பிஸியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல், சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகியவை இருப்பதால் இப்போதைக்கு அமைச்சரவை மாற்றம் மற்றும் துணை முதல்வர் பதவி வேண்டாம் என்றும் இது எல்லாம் முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் முதல்வர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் அதே நேரத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அளவில் சரியாக தேர்தல் வேலை செய்யாதவர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்களே மாற்றிக்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்