போதை பொருள் விவகாரம்.! ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு இபிஎஸ் மீது திமுக வழக்கு..!!

Senthil Velan
வியாழன், 14 மார்ச் 2024 (16:46 IST)
போதை பொருள் கடத்தல் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு கோடி கேட்டு திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட திமுகவின் முன்னாள் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் டில்லியில் கடந்த 9ம் தேதி கைது செய்யப்பட்டார்.
 
அவரை மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
 
இதனையடுத்து ஜாபர் சாதிக் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரை தொடர்புபடுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.
 
இந்நிலையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு கோடி கேட்டு திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ALSO READ: முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் மருத்துவமனையில் அனுமதி..!!
 
தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் வழக்கில் தி.மு.க.வை தொடர்புபடுத்தி பேச அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்