போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் விவாகரத்தில் முக்கிய புள்ளியாக இருந்தது தெரிய வந்ததை அடுத்து, திமுகவில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக ஆட்சியில் போதைப் பொருள் அதிகரித்து வருவது தொடர்பாக ஆளுநரிடம் எடப்பாடி மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.