மருத்துவத்துறையில் செய்த சாதனை… தமிழசையின் கணவருக்கு விருது!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (09:58 IST)
தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவரும் தற்போதைய தெலுங்கானா ஆளுநருமான தமிழிசையின் கணவர் சவுந்தர்ராஜனுக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தனின் மகள் தமிழிசை சவுந்தர்ராஜன். அவர் ஒரு மருத்துவரும் கூட. இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்து முக்கிய தலைவராக படிப்படியாக முன்னேறி, தமிழக பாஜக தலைவராக பதவியேற்றார். கடந்த ஆண்டு அவரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் தெலுங்கானா ஆளுநனராக நியமிக்கப்பட்டார். இவரின் கணவர் சவுந்தர்ராஜனும் ஒரு மருத்துவரே. இவர் சிறுநீரக மாற்று நிபுணராக பணியாற்றி இந்தியாவிலேயே முதல் முறையாக ஹெச் ஐ வி பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதன் முறையாக HIV நோயாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தது உட்பட பல்வேறு சாதனைகளுக்காக மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜனின் கணவர் Dr.சௌந்தரராஜன் அவர்களுக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்