உலகளவில் கொரோனா பாதிப்பு: 3.17 கோடியாக உயர்வு

புதன், 23 செப்டம்பர் 2020 (07:40 IST)
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.17 கோடியாக உயர்ந்துள்ளது என்பதும், குணமடைந்தோர் எண்ணிக்கை 2.33 கோடியாக என்பதும், கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9.74 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
உலகில் கொரோனா தொற்றால் 3,17,63,721 பேர் இதுவரை பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் 
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 974,546 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து இதுவரை 2,33,69,315 பேர் மீண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் உலகில் கொரோனா பாதிப்புடன் 7,419,860 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
 
உலகிலேயே அதிகபட்சமாக நேற்று இந்தியாவில் 1,056 பேர் பலியாகி உள்ளனர் என்பதும், அமெரிக்காவில் ஒரே நாளில் 946 பேரும், பிரேசிலில் ஒரே நாளில் 809 பேரும் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிகபட்சமாக 5,640,496 பேர் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலில் கொரோனா தொற்றால் 4,595,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரேசிலில் 138,159 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர் என்பதும், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 90,021 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்