கருணாநிதி கவலைக்கிடம் - திமுக தொண்டர்கள் கதறல்

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (17:19 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையை அடைந்திருப்பதால் திமுக தொண்டர்கள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.  
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  சற்று நேரத்திற்கு முன்னர் வெளியான அறிக்கையில் “கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய உறுப்புகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, மருத்துவமனை முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் கூடியுள்ளனர். அவர்கள் அனைவரும் ‘தலைவா எழுந்து வா’ என குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், பலரும் கண்ணீர் வடித்து கதறி வருகின்றனர். அதேபோல், எங்கள் தலைவர் எழுந்து வருவார். எங்களை பார்த்து கை அசைப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது என பலரும் கண்ணீர் வடித்த படி கூறி வருகின்றனர். 
 
குறிப்பாக, தற்போது வெளியான மருத்துவமனையின் அறிக்கை, அங்கு கூடியிருக்கும் திமுக தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அவர்கள் கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்