குடும்பத்தினருடன் ஸ்டாலின் ஆலோசனை

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (17:16 IST)
கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக உள்ளது என்ற மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது சிறிது நேரத்திற்கு முன் வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதி உடல்நிலை தொடர்ந்து கவலைகிடமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னை முழுவதும் காவல்துறையினர் பெரும் அளவில் பாதுகாப்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்