வழக்குகளை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு: திமுக முடிவு

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (11:16 IST)
மாவட்டந்தோறும் வழக்கறிஞர்கள் குழு: திமுக முடிவு
தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை சமாளிக்க இன்று திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. காணொளி மூலம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட அனைத்து முக்கிய தலைவர்களும், திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
 
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடாமல் கைது நடவடிக்கையில் ஈடுபடுவதா? என திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் இயற்றப்பட்டது. மேலும் எடப்பாடி அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் கழகத் தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும் அதிமுக. அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என குற்றச்சாட்டிய இந்த கூட்டம், கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட தாமதமே தொற்று அதிகரிக்க காரணம் என்றும் தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்