விவசாய பயண்பாடு மின் இணைப்புக்கு மீட்டர்: விவசாயிகள் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (11:00 IST)
விவசாய பயண்பாடு மின் இணைப்புக்கு மீட்டர்
விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சார இணைப்புகளின் பயன்பாட்டை அறிய மீட்டர் கருவி பொறுத்தும் பணி துவங்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் விவசாயிகள் 5 குதிரை திறனுக்கு மேல் மோட்டார் பயன்படுத்தினால் தலா 20 ஆயிரம் ரூபாய் ஜூன் மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்ற மின்வாரியத்தின் அறிவிப்பும் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய நிதியமைச்சகம், தமிழக அரசின் கடன் வரம்பை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்றால் சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும், அதன்படி விவசாயிகள் பயன்படுத்தும் இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை அவர்களிடம் இருந்து மின்வாரியம் வசூலிக்க வேண்டும் என்றும், அதன்பின் தமிழக அரசு விரும்பினால், அந்த கட்டணத்தை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்த நிலையில் விவசாய பயன்பாட்டிற்க்கு வழங்கும் புதிய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட இணைப்புக்கு ஒரு (HP) குதிரை திறனுக்கும் 20 ஆயிரம் வைப்பு தொகை செலுத்தவும் விவசாயிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்