திமுகவினரின் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலைஞர், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படம்மட்டுமே இடம்பெற வேண்டும் என ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம்க.கார்த்திகேயன்.
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரான வசந்தம் க.கார்த்திகேயன் நேற்று திமுக நிர்வாகிகள், தொண்டர்களைக் கூட்டி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் திமுக மத்தியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
திமுக வினரின் இல்ல திருமண நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ் அச்சடிக்கும்போது அதில் திமுக முன்னாள் தலைவர் கலைஞர், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி மாநிலச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படம் மட்டுமே அச்சடிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். கள்ளக்குறிச்சியில் அதிகமாகி வரும் பொன்முடியின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவே அவர் இவ்வாறு தலைமையைக் குளிர்விக்கும் விதமாகப் பேசியுள்ளதாகவும் புதிதாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட வேண்டும் எனறும்தான் அவர் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது.