திட்டம் போட்டது கலைஞர்; பெயர் மட்டும் ஜெயலலிதாவுக்கா!? – சோகத்தில் திமுகவினர்!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (15:43 IST)
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் திட்டத்தை தொடங்கிய கருணாநிதியின் பெயர் இடம் பெறாதது திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆலந்தூர், சென்ட்ரல், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ எனவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ எனவும் புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ, புரட்சித் தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா CMBT மெட்ரோ எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்பந்த திமுக ஆட்சி காலத்தில் கலைஞர் அவர்களால் நிறைவேற்றப்பட்டது. அப்போது ஜெயலலிதா மெட்ரோ ரயில் திட்டத்தை மிகவும் கடுமையாக எதிர்த்தார். ஆனால் கலைஞர் பெயரை விடுத்து இன்று கோயம்பேடு மெட்ரோவிற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கலைஞர் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட இந்த திட்டத்திற்காக ஒரு மெட்ரோ நிலையத்திற்கு கூட கலைஞர் பெயர் வைக்கப்படவில்லை என திமுகவினரும் பலர் வருத்தம் கொண்டுள்ளதாக தகவல்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்