திமுக - கொ.ம.தே.க. கூட்டணி ஒப்பந்தம் நாளை கையெழுத்து...

Webdunia
திங்கள், 25 பிப்ரவரி 2019 (17:40 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றன. இதில் தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கிய திராவிடக் கட்சிகள் தங்கள் கூட்டணி விவரத்தை வெளிட்டு விட்டனர்.இன்னும் சில கட்சிகளை தங்கள் வசம் ஈர்ப்பதற்காக பலகட்ட பேச்சுவார்த்தைகளை இருபெரும் திராவிட கட்சிகளும் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட  முன்னேற்ற கழகம் - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையேயான கூட்டணி ஒப்பந்தம் நாளை கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
 
இவ்விரு கட்சிகளிடையே கடந்த வெள்ளிக்கிழமை அன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி பற்றிய முதற்கட்ட பேச்சு வார்த்தை நிகழ்ந்தது. இதையடுத்து பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கூறியது. இந்நிலையில் இக்கூட்டணி குறித்த இறுதிக்கட்ட உடன்பாட்டை எட்ட நாளை மீண்டும் இரு கட்சிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இதில் நிச்சயமாக கூட்டணி கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்