யார் சமூக விரோதி என்று காவல் துறைக்கு தெரியாதா? - விஜயகாந்த் கேள்வி

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (19:19 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.


 

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர்.

காவல் துறையினரின் திடீா் தடியடி சம்பவத்தால், சென்னையின் சில இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெற்றன. நடுக்குப்பத்தின் சில பகுதிகளில் வாகனங்கள், கடைகள் தீக்கிரையாகின.

இந்நிலையில், சென்னை நடுக்குப்பத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், ”பொத்தாம் பொதுவாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சமூக விரோதிகளை காவல்துறையினர் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலவரத்தில் யார் தீவரவாதி, யார் சமூக விரோதி என்று காவல் துறைக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரியாதா? ஒட்டுமொத்தமாக கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இந்த கலவரம் குறித்து முழுமையான விசாரணையா நடக்கபோகிறது? இதையும் தமிழக அரசு மூடிமறைக்கதான் போகிறது. என்றார்.
அடுத்த கட்டுரையில்