தினகரன் என்னும் பிரம்ம ராட்சஷின் ஆளுமை

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (18:57 IST)
உங்களில் யார் பாவம் செய்ய வில்லையோ! அவர்கள் இந்த பெண் மேல் கல் எறியட்டும்! என்று மனித புனிதர் ஏசுச் சொன்னதுப் போல, உங்களில் யார்(OPS, EPS, DMK) இடைத்தேர்தல்களில்/இடைத்தேர்தலில் மக்களுக்கு வாக்களிக்க பணம்  தரவில்லையோ! அவர்கள் தினகரன் மேல் கல் எறியட்டும்!



தினகரனும், ஸ்டாலினும்

தினகரன் என்ற ஆளுமையின் வெற்றியே ஆர் கே நகர் வெற்றி! வெற்றி என்பது எதிர்ப்பார்த்த ஓன்று தான், ஆனால் ஸ்டாலின் என்ற ஆளுமைக்கும் தினகரன் எனும் ஆளுமைக்கும் ஆன இடைவேளி தான் என்னை வியக்க வைக்கிறது. தினகரன் ஆர் கே நகர் இடைத்தேர்தலை அணுகிய விதம் தான் அவருக்கு இந்த வெற்றி பெற்று தந்து இருக்கிறது.

அரசியல் பன்ச்கள்

நான் செய்தேன்!  நீங்கள் செய்வீர்களா!  - ஜெயலலிதா
மோடியா! லேடியா!  - ஜெயலலிதா
நாளையும்  நமதே!  நாற்பதும் நமதே! - கருணாநிதி 
என்ற அரசியல் பன்ச்கள் எல்லாம் தமிழகம் கண்டு இருக்கிறது. ஆனால் களத்துக்கு தினகரன் சொன்ன ஒரே பன்ச் “என்னை ஜெய்யிக வைக்க! இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்!” என்றதும், மக்கள் தினகரனுக்கு வெற்றி பரிசு தந்தார்கள் 

அன்று சேவல்; இன்று குக்கர்
கட்சியை வழிநடத்தவும், தேர்தலில் வெற்றியை பெறவும் தேவை ஆளுமையே அன்றி சின்னம் முக்கியமல்ல என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. மக்கள் பணம் வாங்கி வாக்களித்து இருக்கிறார்களா? இல்லையா என்று தெரியவில்லை ஆனால் தங்கத்தை தவிட்டுக்கு விற்கவில்லை.

அன்று ஜெயலலிதாவிற்கு ஒரு சேவல்
இன்று தினகரனுக்கு ஒரு குக்கர்

தர்ம யுத்தத்திற்கு பிரஷர் தான் 

தொடர் அழுத்தங்கள், நீதிமன்ற வழக்குகள், சின்னம் கை விட்டு போன தவிப்பு, என  எதையும் சிறிதும் சட்டை செய்யாமல் அந்த சிரித்த முகத்திற்கு மக்கள் தங்கள் வாக்குகளை அளித்து இருக்கிறார்கள்.

குறிப்பாக தினகரன் தனி ஒரு மனிதராக களத்தில் எந்த விதத்திலும் பதட்டம் இல்லாமல் பிரச்சினைகளைத் கையாண்ட விதம் அவர் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பை. ஏற்படுத்தியது. தினகரனின் தொலைக்காட்சி பேட்டிகள் இளைஞர்களிடம் அவருக்கு என்று தனியொரு இடத்தை உருவாக்கியது. புன்னகை அதிபரின் சிரிப்பு உண்மையிலேயே! தர்ம யுத்தத்த்திற்கு பிரஷர் தான் 

 
ஸ்டாலின் செய்ய தவறியது, தினகரன் செய்தது

ஸ்டாலின் செய்ய தவறியது, பெற தவறியது நடுநிலை வாக்காளர்களின் கண்ணோட்டத்தை!. தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் இந்த ஆட்சியின் மீது தொடரும் மக்களின் அவ நம்பிக்கையை வாக்குகளாக மாற்ற தவறியது!. இது உண்மையில் தேர்தல் கமி ஷனின் தோல்வியும் அல்ல! திமுக-வின்  தோல்வியும் அல்ல!
இது மூன்றாம் இடம் பெற்று, டெபாசிட் இழந்த ஸ்டாலின் அணுகுமுறைக்கான  தோல்வி!   

 - இரா காஜா பந்தா நவாஸ்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்