வக்பு மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர்வோம்: சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு..!

Siva

வியாழன், 3 ஏப்ரல் 2025 (10:43 IST)
நேற்று மக்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அந்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்வோம் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இன்று முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே, வக்பு சட்ட திருத்த மசோதாவின் முன் வரைவை திரும்ப பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது என்றும், அனைத்து கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 
 
கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு நள்ளிரவு 2 மணிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றும், இது அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும், மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.
 
"இதற்காக கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றுள்ளோம்" என்று தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்