இவ்ளோ நாள் தெரியலயா கேப்டனுக்கு உடம்பு சரியில்லனு.. தயா அழகிரி நெத்தியடி

Webdunia
வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (18:45 IST)
அதிமுக - பாஜக - பாமக கூட்டணி,  திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தேமுதிக யார் பக்கம் கூட்டணி அமைக்கும் என்பது தற்போதைய அரசியல் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது சிகிச்சை முடிந்து வந்துள்ள நிலையில், அவரை காண, திருநாவுக்கரசர், பியூஸ் கோயல், ரஜினிகாந்த், ஸ்டாலின் என அனைவரும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர். 
 
இது கூட்டணிக்கான சந்திப்பு என பலர் யூகித்தாலும், இதனை மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறி வருகின்றனர். இது குறித்து அழகிரியின் மகன் தயா அழகிரி டிவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 
 
"இவ்ளோ நாள் யாருக்கும் தெரியலயா கேப்டன் விஜயகாந்த்துக்கு ஹெல்த் சரி இல்லைன்னு.. நீங்க திருந்தவே மாட்டீங்க" என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இது யாருக்கான டிவிட் என்பதுதான் தெரியவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்