பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனா! இந்தியாவுக்கு தொல்லை தர புதிய ப்ளான்?

Prasanth Karthick

வெள்ளி, 27 டிசம்பர் 2024 (09:21 IST)

இந்தியா - சீனா எல்லையில் பிரம்மப்புத்திரா நதியில் சீனா பிரம்மாண்டமான அணை கட்ட திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

திபேத் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி திபேத் வழியாக பாய்ந்து அருணாச்சலபிரதேசம், அசாம் மாநிலங்கள் வழியாக பயணித்து வங்கதேசம் வழியாக வங்க கடலில் சென்று சேர்கிறது. திபேத், இந்தியா, வங்கதேசம் என மூன்று நாடுகளுக்கு நடுவே பாயும் நதியான பிரம்மபுத்திராவை வைத்து புதிய பிரச்சினையை உருவாக்க தொடங்கியுள்ளது சீனா.

 

தொடர்ந்து அருணாச்சல பிரதேச எல்லைகளை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, தற்போது திபேத்தில் பிரம்மபுத்திரா தொடங்கும் பகுதியிலேயே உலகிலேயே மிக பிரம்மாண்டமான அணை ஒன்றை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதனால் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் நீராதாரம் பாதிக்கப்படலாம் மற்றும் சீனா அணையை ஒரே அடியாக திறந்துவிட்டால் வெள்ள பாதிப்புகளை சந்திக்க நேரலாம்.

 

சீனாவின் இந்த திட்டத்திற்கு முன்பாகவே அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்ட இந்திய அரசு திட்டமிட்டிருந்தது. சீனாவின் இந்த குயுக்திகளை முறியடிக்க அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா அணைக்கட்டும் பணிகளை துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்