ஏற்கனவே நேற்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், விஜயகாந்தை சந்தித்தார். சற்று நேரத்திற்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்து பேசினார். விஜயகாந்தை சந்தித்த பின் இவர்கள் அனைவரும் கூறியது, இது அரசியல் சந்திப்பல்ல. கேப்டனின் உடல்நலம் பற்றி விசாரிக்கவே வந்தோம் என்பது தான்.
இந்நிலையில் அழகிரியின் மகன், உதயநிதி அழகிரி தனது டிவிட்டர் பக்கத்தில் இத்தன நாளா கேப்டனுக்கு உடம்பு சரியில்லன்னு தெரியாதா? நீங்க திருந்தவே மாட்டீங்க என கூறியுள்ளார். இது யாரை கோவப்பட்டுத்தியதோ இல்லையோ திமுகவினரை செம கோபத்திற்கு ஆளாக்கியுள்ளதாம்.