ஆளாளுக்கு ’தேமுதிக’வை கூட்டணிக்கு இழுக்க என்ன காரணம்..?

வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (17:14 IST)
திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை தக்க வைத்துக்  கோலோச்சிக் கொண்டிருந்த விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அதற்கடுத்த ஆண்டு நடைபெற்ற சட்ட சபைத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த். விருதாசலத்தில் போட்டி இட்டார். ஆனால் அவர் மட்டுமே சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டர்.
அடுத்து சில ஆண்டுகளில் கலைஞர் தலைமையிலான அரசு விஜயகாந்த்-ன் கோயம்பேட்டிலுள்ள மண்டபத்தை இடித்தது.
 
இதனையடுத்து திமுகவிற்கும் தேமுதிகவிற்கும் பகை என்பது போல் பார்க்கப்பட்டது. அடுத்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக   தேர்தலை சந்தித்தது.
 
இதில் பெருவாரியான இடங்களை பெற்ற ஆட்சியை பிடித்தது அதிமுக. முதலைமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதுடன்,. விஜயகாந்தை எதிர்கட்சி தலைவராக பதிவியேற்க செய்தார். குறுகிய காலத்திலேயே சட்டமன்ற  எதிர்கட்சித் தலைவராக உயர்ந்தார் என்று விஜயகாந்தை புகழாதவர்கள் இல்லை.
 
இந்நிலையில் பின்னர் கடந்த 2015 ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கு தலைமை வகித்த தேமுதிக பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதிலிருந்து தேமுதிகவுக்கு இறங்கு முகம் தான்.

அண்மைக்காலமாக விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே அவரது மனைவி பிரேமலதா  விஜயகாந்த்  கட்சியை வழிநடத்தினார்.
 
உடல்நிலை சரியாக அமெரிக்காவிலிருந்து   சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்தை சுற்றியே தற்போதைய தமிழக அரசியல் காய்கள் நகர்கிறது. இதை நன்கு புரிந்து கொண்ட தேமுதிக தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல் இந்த மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி  பேரம் பேசிவருகிறது.
சில நாட்களுக்கு  முன்னர் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பாஜகவின்  பியூஸ் கோயல், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சற்று நேரத்துக்கு முன்னர் ரஜினி, ஆகியோர் விஜயகாந்தை சந்தித்த நிலையில் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினும் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இது அரசியலில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
 
இது குறித்து ஸ்டாலின் கூறியதாவது ,
 
விஜயாகாந்த் தலைவர் கருணாநிதியின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தார். மேலும்  உடல்நிலை சரியில்லாமல், அமெரிக்காவில் இருந்து  சிகிச்சை பெற்று வந்துள்ள  விஜயகாந்தை பார்ப்பதற்காக வந்துள்ளேன். மனிதநேயத்தின் அடிப்படையிலான சந்திப்பு இது என்றார். அரசியல் பற்றியோ கூட்டணி குறித்து பேசவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்தார்.
 
இந்நிலையில் தேமுகவுடன் கூட்டணி குறித்து டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.தமிழக மீனவர் காங்கிரஸ் அணியின்  மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட கே.எஸ்.அழகிரி கூறியதாவது:
 
திருநாவுக்கரசர் விஜயகாந்த் சந்திப்பானது நட்பு ரீதியிலாக ஏற்பட்டது. மேலும் வரும் தேர்தலில் எந்தக் கட்சியை கூட்டணியில் சேர்ப்பது பற்றி டெல்லியில் தலைமை மற்றும் தமிழக தலைமையான திமுகவும்தான் முடிவு செய்வார்கள். மேலும் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக 20 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.
 
தேசிய மற்றும் தமிழகத்தில் உள்ள பலம் வாய்ந்த கட்சிகள் எல்லோரும் தேமுதிகவை கூட்டணிக்காக நாடி, தேடி வருவது அக்கட்சியிடம் உள்ள பெருவாரியான இளைஞர்கள் வாக்கே காரணமாகும்.
சினிமாவில் இருந்து தேமுதிக என்ற  கட்சியின் தலைவராகியுள்ள விஜயகாந்த் தான் நடிகராக இருந்த போது தன்னலம் பாராமல் விளம்பரமில்லாமல் ஏழை எளியோர்க்கு செய்த உதவிகள்தான் பொதுஜன மத்தியில் விஜயகாந்தை கொண்டு சேர்த்தது எனலாம். 
 
அப்போதைய முதல்வர்களான ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது கூட அவர்களை எதிர்த்து தன் கொள்கைகளை முன்வைத்து தைரியமாக அரசியல் செய்தார் விஜயகாந்த். அதனாலும் பெருவரியான இரு பெரும் திராவிட கட்சிகளில் திரண்டிருந்த இளைஞர்கள் இவரின் தலைமை நாடி வந்தனர்.தற்போது மற்ற அரசியல் கட்சிகளும் அவரைத் தேடி வருகின்றனர். ரஜினி, கமலுக்கு சினிமாவில் வேண்டுமானால் விஜயகாந்த் ஜூனியராக இருக்கலாம், ஆனால் தமிழக அரசியலில் அவர்கள் இருவருக்குமே விஜயகாந்த் சீனியர் என்றே கருதப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் தன் கட்சிக்கென்று குறிப்பிட்ட சதவீதம் வாக்கு வங்கியை வைத்திருக்கிறார்.

இதுவே பல அரசியல் கட்சி தலைவர்கள் ஆளாளுக்கு போட்டி போட்டு விஜயகாந்த்தை தம் பக்கம் இழுக்க முக்கிய காரணமாகும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்