ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (14:55 IST)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி கோவையை சேர்ந்த முகமது ரஃபீக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ஆர்.கே நகர் இடைதேர்தலை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் உள்ள வாக்களர்களுக்கு ஓட்டுக்கு 10000 வரை பணம் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கோவையைச் சேர்ந்த முகமது ரஃபீக் அளித்துள்ள மனுவில், கடந்த முறை ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா காரணமாக இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாகவும் ஆனால் தற்பொழுதும் அதேபோல் ஆர்.கே நகரில், பல்வேறு கட்சியை சேர்ந்த நபர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  
 
எனவே தேர்தல் நடத்துவதற்கான சூழல் தற்போது இல்லை என்பதால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை ரத்து செய்யுமாறு முகமது ரஃபீக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு அளித்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்கே நகர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்