ஜெ. வீடியோ வெளியிட்டது தேர்தல் விதிமீறல்: வழக்கு பதிவு செய்ய தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவு!

புதன், 20 டிசம்பர் 2017 (12:30 IST)
ஆர்கே நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் தரப்பினர் இன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் பழச்சாறு அருந்தும் வீடியோவை ஓராண்டுக்கு பின்னர் தற்போது இன்று வெளியிட்டதற்கு காரணம் ஆர்கே நகர் தேர்தல் தான் என பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த வீடியோ வெளியானது தேர்தல் விதிமீறல் என மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார். தேர்தல் நடைபெற உள்ள 48 மணி நேரத்திற்கு முன்னர் தேர்தல் பரப்புரை தொடர்பான எந்த செயலிலும் ஈடுபட கூடாது என விதி உள்ளது.
 
126(பி) விதியை மீறி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர். எனவே 126(பி) சட்ட விதியின் கீழ் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்