டிசம்பர் 6ம் தேதி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:16 IST)
டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலையில் தீப திருவிழா நடைபெற உள்ளது. இதனையடுத்து தீபத்திருவிழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் லட்சக்கணக்கானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்