திருவண்ணாமலை குபேர கிரிவலம்.. பக்தர்கள் பரவசம்

புதன், 23 நவம்பர் 2022 (20:00 IST)
திருவண்ணாமலையில் பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் ஆகிய முக்கிய நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் 
 
கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபட்டால் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்பது ஒரு நம்பிக்கை, இந்த நிலையில் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில் குபேர பெருமான் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் 
 
அன்றைய தினம் கிரிவலம் சென்றால் குபேர பெருமானின் அருள் கிடைக்கும் என்றும் அதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்றும் நம்பிக்கையாக உள்ளது. இந்த நிலையில் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வந்த நேற்று ஏராளமானோர் குபேர கிரிவலம் சென்றனர்
 
ஒரே நாளில் லட்சக்கணக்கான ஒரு நேற்று கிரிவலம் சென்றதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்