சன் நியூஸ் ஆசிரியரின் தந்தை மறைவு- முதல்வர் மற்றும் சசிகலா இரங்கல்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (16:24 IST)
சன் செய்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான திரு. மு. குணசேகரனின் தந்தை முனியா இன்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மற்றும் சசிகலா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின்  தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’சன் செய்தித் தொலைக்காட்சி முதன்மை ஆசிரியரும், ஊடகவியலாளருமான திரு. மு. குணசேகரன் அவர்களின் தந்தையார் திரு. முனியா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினேன்.

அவரது மறைவால் வாடும் திரு. குணசேகரன், அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன் சமூய்க வலைதள பக்கத்தில்,

‘’சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் திரு.மு.குணசேகரன் அவர்களின் தந்தை முனியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தனது தந்தையை இழந்து வாடும் திரு.மு.குணசேகரன் அவர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்