தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணப்பம்: அரசு தேர்வுகள் இயக்ககம்

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (12:43 IST)
தமிழ்நாட்டில் ஜூன் 2023ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு (D.T.Ed), தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 
தனித் தேர்வர்கள் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அனைத்து மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன் தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக மே 9 முதல் மே 13 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 
 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா வழியாக புகைப்படம் எடுக்கும் வசதி சேர்க்கப்பட்டுள்ளதால் அந்நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
தேர்வு கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 ரூபாய் என்றும், மதிப்பெண் சான்றிதழ் பெற 100 ரூபாய் என்றும், பதிவு மற்றும் சேவை கட்டணம் 15 ரூபாய் என்றும், ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் மே 15, 16 ஆகிய தேதிகளில் கூடுதல் கட்டணமாக ரூபாய் ஆயிரம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்