மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்: விண்ணப்பிக்க ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (16:05 IST)
மத்திய அரசில் 7500 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்கள் அதில் விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில்  காலியாக உள்ள குரூப் B மற்றும் குரூப் C அலுவலர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. 
 
உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer) பணியிடங்களும்,  மத்திய அரசின் வருவாய் துறைகளான Central Board of Direct Taxes, Central Board of In Direct Taxes & Customs, Directorate of Enforcement, Central Bureau of Narcotics ஆகியவற்றில் ஆய்வாளர் பணியிடங்களும் (Inspector) மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் உதவியாளர், கண்காணிப்பாளர்களும் (Assistant Superintendent) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
 
இந்த பதவிகளுக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் மே 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்விற்கான கல்வித் தகுதி குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு  பெற்றிருக்க வேண்டும்.
 
இந்த பணியில் விண்ணப்பம் செய்ய  sscnic.in என்ற இணையதளம் சென்று கூடுதல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்