கோவிஷீல்டு பரிசோதனையால் பக்கவிளைவு; ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

Webdunia
ஞாயிறு, 29 நவம்பர் 2020 (09:38 IST)
கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனையால் பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தன்னார்வலர் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் பல நாட்டு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனிகா இணைந்து கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. இந்த தடுப்பூசி கொரோனாவிலிருந்து மக்களை எந்தளவு பக்க விளைவு இல்லாமல் காக்கும் என்பது தொடர்பாக ஆராய இதை முதலாவதாக தன்னார்வலர்களுக்கு அளித்து சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர் ஒருவருக்கு உடல் அயற்சி, உறவினர்களை கண்டுணர முடியாமை ஆகிய பக்க விளைவுகள் ஏற்பட்டதால் முன்னதாக சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த நபருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவர் உடநிலையில் மாற்றம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி பரிசோதனையிலிருந்து விலகியுள்ள அவர் தனக்கு இழப்பீடாக ரூ.5 கோடி அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்