மதுரை தோப்பூர் எய்ம்ஸ்: நிதியளவை கூட்டியது ஜப்பான் நிறுவனம்!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (08:18 IST)
மதுரை தோப்பூர் எய்ம்ஸ்க்கான நிதியை ரூ.2,000 கோடியாக உயர்த்தியது ஜப்பானின் ஜைக்கா நிறுவனம். 

 
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இதற்கான இடம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென மாநில அரசு இன்னும் இடத்தை கையகப்படுத்த கொடுக்கவில்லை எனவும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை வாங்க மத்திய அரசு மறுப்பதாக மாநில அரசும் மாறி மாறி குற்றம் சுமத்தி கொண்டிருந்தன. 
 
எனவே மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமா? அப்படி அமையும் என்றால் எப்போது அமையும்? என்று தென்காசியை சேர்ந்த பாண்டியராஜா என்பவர் ஆர்.டி.ஐயில் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். 
 
இந்த கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளித்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மார்ச் 31-க்குள் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
மேலும், மதுரை தோப்பூர் எய்ம்ஸ்க்கான நிதியை ரூ.2,000 கோடியாக உயர்த்தியது ஜப்பானின் ஜைக்கா நிறுவனம் எனவும் ஆர்டிஐ-யின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதாவது, எய்ம்ஸ் திட்டத்தினை மறுமதிப்பீடு செய்ததால் நிதி ரூ.1,264 கோடியிலிருந்து ரூ.2,000 கோடியாக ஜைக்கா நிறுவனம் உயர்த்தியுள்ளதாக தகவல். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்