35 கிமீ., தூரம்... அதிவேகத்தில் கொண்டு செல்லப்பட்ட மனித இதயம் !

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (22:46 IST)
தெலுங்கானா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணிகள் இல்லாமல்  இயக்கப்பட்டு சில நிமிடங்களிலேயே கொண்டுசெல்லப்பட்டு வேறு ஒருத்தருக்குப் பொருத்தப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மூளைச்சாவு அடைந்த ஒருவருடைய இதயம் வேறு ஒருத்தருக்குப் பொருத்தவேண்டி சாலையில் போக்குவரத்தில் பல இடங்களில் பாதுக்காப்புடன் இருக்க இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புக் கொடுக்க, குறுகிய நேரத்தில் அந்த இதயம் வேறு ஒருத்தருக்குப் பொருத்தப்பட்டது.

தற்போது இதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் பயணிகளே இல்லாமல், மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்டு வேறு ஒருத்தருக்குச் சில நிமிடங்களிலேயே பொருத்தப்பட்டது.

உடன் மருத்துவர்களும் செவிலியர்களும் பயணித்தனர். இந்த சாதனை நிகழ்ச்சி பலராலும் பாராட்டப்பட்டு, இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு ரெயில்வே துறையினர் திட்டமிடலும், மக்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்