அறைக்கு வெளியே தந்தை…. 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – கரஸ்பாண்டண்ட் தலைமறைவு !

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (08:59 IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு வகுப்புக்காக வந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் தப்பி தலைமறைவாகியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் குழந்தகளுக்கான கையெழுத்துப் பயிற்சிக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொள்வதற்காக அருகில் உள்ள  பள்ளியில் படிக்கும் 10 வயது மாணவி ஒருவர், தன் தந்தையோடு அங்கு வந்துள்ளார். சிறுமியின் தந்தை அதே பள்ளியில் நடக்கும் ஜோதிட வகுப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அந்த மாணவி பள்ளியின் தாளாளர் குருத்திடம் கையெழுத்து வாங்குவதற்காக அவரது அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவர் அந்த குழந்தையிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி பயத்தில் அலற உடனே அந்த அறைக்கு ஓடியுள்ளார் தந்தை. அப்போது குருத் தன்னை மன்னித்து விடுங்கள் என சொல்லி அவரிடம் கெஞ்சியுள்ளார்.

நடந்ததைப் புரிந்துகொண்ட தந்தை உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார்.  காவலர்கள் வருவதற்குள்  குருத் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்