தமிழகத்தில் ஒரேநாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு !

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (16:48 IST)
இன்று காலைநேர நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. 
 
தமிழகத்தில் 234 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு  மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவந்த நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே தற்போது தமிழகத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உத்தர பிரதேசத்தில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்