இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ள நிலையில் உத்தர பிரதேசத்தில் ஒரேநாளில் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சற்றுமுன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301ஆக உயர்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது, 157 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அரசு அங்கீகரித்த செய்தியாளர்களுக்கு தலா ரூ.3,000 நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.