ஒரு நாளை 14 லட்சம் பேர் சாப்பிட்டும் #அம்மா உணவகம்... நக்கீரனில் வெளியான செய்தி..அதிமுக டுவீட்

வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (14:56 IST)
தமிழகத்தில் 234 பேருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு  மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
 

தமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்த மக்களுக்கு, வெளிமாநில மக்களுக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போது, தமிழகத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம் அனைத்து மக்களின் பசியை ஆற்றியது. இரண்டாவது முறை அதிமுகவை மக்கள்  ஆட்சியில் அமர்த்தவும் முக்கியக காரணமாக இருந்தது.

தற்போது, கொரோனாவால் தமிழகத்தில் யாரும் பட்டிணியால் சாகக் கூடாது என்று தமிழக முதல்வர் அமைச்சர் வேலுமணியிடம் கூற,  ‘’அம்மா உணவகம் 24 மணிநேரம் இயங்கவேண்டும், ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்ற வேண்டும், சமையலுக்குத் தேவையான  பொருட்களையும்  அத்தனையும் பற்றாக்குறை இல்லாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு  அமைச்சர் வேலுமணி ஐடியா கொடுத்ததாகவும், அதனை எடப்பாடியார் ஏற்றதாகவும் ‘ அதன்பிறகு உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு வேலுமணி உத்தரவிட்டு செயல்படுத்தியதாகவும் ’நக்கீரனில் செய்தி வெளியானது.

மேலும், முன்னர், ’’சென்னையில் தினமும் 800 என மொத்தமுள்ள 407 உணவகங்களிலும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சாப்பிட்டுவந்த நிலையில், தற்போது ஊரடங்கு உத்தரவினால், கடந்த மார்ச் 28 ஆம் தேதி அன்று சென்னையில் மட்டும் 14 லட்சம் பேர் உணவருந்தியதாக புள்ளிவிபரத்துடன் தெரிவித்து மக்கள் உணவகமாக உள்ளது’’ என தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து, அதிமுகவிம் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஒரு நாளை 14 லட்சம் பேர் சாப்பிட்டும் #அம்மா உணவகம்..

"முதல்வருக்கு உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்... ஐடியா கொடுத்த அமைச்சர் வேலுமணி... அமைச்சருக்குப் போட்ட அதிரடி உத்தரவு! "

- இப்படியான செய்தி ஒன்று இன்றைய நக்கீரன் இணையத்தில் வெளியாகியுள்ளது...என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்