சென்னையில் கொரோனா சுனாமி போல பரவுகிறது… தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி கவலை!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (08:41 IST)
கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி செய்தியாளர்களிடம் பேசும்போது சென்னையில் கொரோனா சுனாமி போல பரவி வருவதாக கூறியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட அனைத்து இந்திய மாநிலங்களிலும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தொற்று மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த கொரோனா தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக் ‘சென்னையில் கொரோனா பரவல் சுனாமி போல உள்ளது. ஆனால் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்