சென்னையில் நள்ளிரவு முதல் மழை.. தட்பவெப்பம் மாறியதால் மக்கள் மகிழ்ச்சி..!

Siva
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (06:58 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மழை பெய்து கொண்டிருந்ததை அடுத்து, சென்னை முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழை இந்த மாதம் இரண்டாவது வாரம் தொடங்க இருக்கும் நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு முதல் சென்னையில் மிதமான மழை பெய்தது. கோயம்பேடு, வடபழனி, அடையாறு, தரமணி, மந்தைவெளி, வேளச்சேரி, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் கன மழை பெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான காற்றின் நிலை மாறியுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், தற்போது குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை மாறியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இன்னும் மழை அதிகமாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்