வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும், இந்தூரில் பிச்சை எடுப்பதை தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிச்சை எடுப்பதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும் என்றும், ஜனவரி 1ஆம் தேதி முதல் யாராவது பிச்சை எடுத்தாலோ அல்லது பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டது கண்டுபிடிக்கப்பட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிச்சைக்காரர்கள் குறித்து ஆய்வு செய்த போது, பிச்சைக்காரர்கள் பலர் சொந்த வீடு வைத்திருக்கிறார்கள் என்றும், அவர்களது குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் அறிந்தோம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.