அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Mahendran

திங்கள், 7 அக்டோபர் 2024 (14:39 IST)
அரபிக் கடலில் நாளை மறுநாள், அதாவது அக்டோபர் 9 ஆம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
இதனால் அக்டோபர் 9 முதல் 12 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அக்டோபர் 9 ஆம் தேதி, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதன் காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்றும், அதன் பின் வடமேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இதனால் தமிழ்நாட்டில் உள்ள தேனி, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு நாளை முதல் 12 ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்