போதைப்பொருள் கொடுத்து ஆடையின்றி ஆண்களை புகைப்படம் எடுத்த பெண்.. இளைஞர்கள் புகார்..!

Siva
திங்கள், 7 அக்டோபர் 2024 (20:03 IST)
பணக்கார இளைஞர்களை ஏமாற்றி வீட்டுக்கு வாழவைத்து போதை பொருள் கொடுத்து ஆடை இன்றி புகைப்படம் எடுத்து புகார் செய்த பெண் கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜாய் ஜமீபா என்ற பெண் தனது தோழிகளுடன் சேர்ந்து பணக்கார இளைஞர்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் தலைவியாக இருந்து உள்ளார்.

இவர் பணக்கார இளைஞர்களிடம் பழகி அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி வீட்டுக்கு வர வைத்ததாகவும் அதன் பின்னர் அவர்களுக்கு போதை வஸ்து கொடுத்து அவர்கள் போதையில் இருந்த போது ஆடை இன்றி புகைப்படம் எடுத்து பின்னர் பணம் கேட்டு மிரட்டியதை வழக்கமாக வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஜாய் ஜமீபா கைது செய்யப்பட்ட நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட மற்ற இளைஞர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நிறைய புகார்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்