கனிமொழி, சிதம்பரம் போன்றவர்கள் தமிழக மானத்தை கப்பலேற்றிவிட்டதாக தமிழக சட்ட துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சாடியுள்ளார்.
விழுப்புரத்தில் நடந்த ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ப.சிதம்பரம் யோக்கியர் கிடையாது. இந்தியாவின் நிதியை வெளிநாட்டிற்கு கொள்ளையடித்த மிகெப்பெரிய குற்றவாளி அவர். டெல்லி உயர்நீதிமன்றமே இது கண்டிப்பாக விசாரிக்க வேண்டிய குற்றம் என கூறியுள்ளது.
ஏற்கனவே கனிமொழியால் தமிழக மானம் கப்பல் ஏறியது. இன்று சிதம்பரம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். எங்களை சிறைக்கு அனுப்புவேன் என கூறியவர்களை கடவுளாய் பார்த்து களி திண்ண வைத்துள்ளார். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என கூறியுள்ளார்.