மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (14:07 IST)
திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிதுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் கொழுமம் கிராமம், கொழுமம் பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று (16-10-2023) காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் திருமுரளி ராஜா, தபெமன்மதன் (வயது 35). திரு கௌதம், தபெ சின்னதேவன் (வயது 29) மற்றும் திருமணிகண்டன், தபெ யாழி (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து அவர்களை உடுமலைப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த மூவரையும் இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு. அவர்களது குடுப்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்