தமிழக அரசு வேடிக்கை பார்த்தால் ரயில் மறியல் போராட்டம்: கே பாலகிருஷ்ணன்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (13:15 IST)
காசி சங்கமம் என்ற பெயரில் மாணவர்களுக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டு உள்ளதாகவும் இதனை தமிழக அரசு வேடிக்கை பார்த்தால் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில் மறியல் நடத்தப்படும் என அக்கட்சியின் பாலகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காசி சங்கம் என்ற பெயரில் ஐஐடி மாணவர்கள் 2500 பேரை காவி சாயம் பூச தமிழக ஆளுநர் மற்றும் அமைச்சர் முருகன் ஆகியோர் வழி அனுப்பி வைத்துள்ளனர்
 
காசி சங்கமம் நிகழ்ச்சியை மத்திய மாநில அரசுகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சி அல்ல. காசி சங்கமம் என்ற பெயரில் பள்ளி கல்லூரி மாணவர்களை ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது 
 
இந்த விவகாரத்தில் தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது. இது தொடரும் பட்சத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ரயில் மறியல் நடத்தப்படும் என பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்