கோவை வெடி விபத்து: 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு- காவல் ஆணையர்

செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:51 IST)
கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  காவல் ஆணையம் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 

நேற்று முன்தினம்  அதிகாலை கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார்.

இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டார். இந்த வழக்கில் வெளியாகியுள்ள பல தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. உயிரிழந்த முபினின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் முபினும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து சில பொருட்களை காரில் ஏற்றும் காட்சிகள் கிடைத்துள்ளது. அதை கொண்டு போலீஸார் அந்த மற்ற நபர்களை தேடி வந்தனர்.

இந்த வழக்கில் தற்போது முபின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தி தொடர்புடையவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையம் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: காரில் இருந்த சிலிண்டர் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் கூட்டு சதி, 120 பி, 153 ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்