காவல்துறை மக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வெள்ளி, 27 மே 2022 (18:22 IST)
காவல்துறை மக்களோடு இணக்கமாக இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
காவல்துறையினருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய போது காவல்துறை மக்களோடு இணக்கமாக  இருந்தால் தான் குற்றங்கள் குறையும் என்றும் காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்கும் துறையாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார் 
 
ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தவறு செய்தால் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் தலை குனிவு ஏற்படும் என்பதை ஒவ்வொரு காவல்துறை அதிகாரியும் மனதில் வைத்துக் கொண்டு பணிபுரிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்