மறக்கமுடியாத பயணம்.. நன்றி தமிழ்நாடு..! – பிரதமர் மோடி ட்வீட்!

வெள்ளி, 27 மே 2022 (13:16 IST)
நேற்று தமிழகத்தில் பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைக்க வந்த பிரதமர் மோடி தன்னை வரவேற்ற தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மத்திய அரசின் பல்வேறு நலப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறகு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நேற்றைய தமிழக பயணம் குறித்த வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “நன்றி தமிழ்நாடு, நேற்றைய பயணம் நினைவுக்கூரத்தக்க ஒன்று” என கூறியுள்ளார். ஆனால் தமிழ்நாடு வரும் முன்னதாக தெலுங்கானா சென்று வந்த பிரதமர் அதுகுறித்து எதுவும் கூறவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்