திரிவேணி சங்கமத்தில் புனித நீராடும் 73 நாடுகளின் தூதுவர்கள்.. கூடுதல் பாதுகாப்பு..!

Siva

ஞாயிறு, 26 ஜனவரி 2025 (10:19 IST)
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவும் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழாவும் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா திருவிழா நடைபெற்று வருகிறது.

ஜனவரி 13ஆம் தேதி ஆரம்பித்த இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு  கங்கை, யமுனை, சரஸ்வதி இணையும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்பட 73 நாடுகளின் தூதுவர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி உத்தரபிரதேசம் வர இருப்பதாகவும் அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதனை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மகா கும்பமேளா அதிகாரி விஜய் கிரண் என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து உத்தரபிரதேச தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சக  அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்