சென்னையில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு: தமிழக முதல்வர் ஆலோசனை!

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (11:08 IST)
சென்னையில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு: தமிழக முதல்வர் ஆலோசனை!
சென்னையில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு வழங்குவது குறித்த ஆலோசனையை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
சென்னையில் மாநகர பேருந்து, மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில் ஆகிய போக்குவரத்து வசதி இருக்கும் நிலையில் இந்த மூன்றிலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது
 
சென்னையில் மாநகர பேருந்து ,மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
ஒருங்கிணைந்த பெரு நகர போக்குவரத்து குடும்பத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருவதாகவும் இந்த கூட்டத்தில் ஒருங்கிணைந்த பயணச்சீட்டு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த பயணச்சீட்டு அமலுக்கு வந்தால் ஒரே டிக்கெட்டை எடுத்துக்கொண்டு மெட்ரோ ரயில் புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்து ஆகிய மூன்றிலும் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்