இதை செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைதாவர்களே! நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:21 IST)
குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள், டவுன்லோட் செய்பவர்கள், மொபைலில் சேமித்து வைத்து இருப்பவர்கள் ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி ரவி அவர்கள் இன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உறுதி செய்தால் தமிழ்நாட்டில் பாதி பேர் கைது செய்யப்படுவார்கள் என நெட்டிசன்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் 
 
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி அவர்கள் இதுகுறித்து கூறியதாவது ’இந்தியாவிலேயே குழந்தைகளின் ஆபாச படங்களை அதிகம் பார்ப்பவர்கள் தமிழகத்தில்தான் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையை அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும், இதனை அடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க எடுக்க காவல்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மட்டுமின்றி அதனை டவுன்லோட் செய்தவர்கள் மொபைலில் சேமித்து வைத்தவர்கள் ஆகியோர்களின் மீது உடனடியாக கைது நடவடிக்கை தொடங்கும் என்று டிஜிபி ரவி அவர்கள் எச்சரித்துள்ளார் 
 
தற்போது மொபைல் போன் மற்றும் இன்டர்நெட் அனைவரின் கையிலும் வந்துவிட்டதால் ஆபாச படங்களை கிட்டத்தட்ட அனைவருமே பார்த்து வரும் நிலையில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை பார்ப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்தால் தமிழகத்தில் பாதி பேர் கைது செய்யப்படுவார்கள் என்றும் நெட்டிசன்கள் நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்