தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து ..

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (11:37 IST)
பிரபல நடிகரும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பல்வேறு திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் .
 
அதில்,  "கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை பிராத்திக்கிறேன்" இவ்வாறு முதல்வர் தனது வாழ்த்து செய்தியில்  தெரிவித்துள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்